இந்த கேள்விக்கு, நீங்கள் ஒரு அப்பா என்ற நிலையில் பதிலை யோசித்துப்பாருங்கள். உங்கள் மகன் (அ) மகள் ஏன் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்? அதற்கான பதில் என்னவாக இருந்தாலும், அதன் நோக்கம் என்னவோ, என்னுடைய மகன் (அ) மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. பத்தாம் வகுப்போ பன்னிரண்டாம் வகுப்போ ? நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றால் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிள்ளைகள் உபத்திரவப்பட்டால் தான் அவர்கள் பொதுதேர்விற்காக பலப்பட முடியும். இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிற நம்முடைய வாழ்க்கையில் இருக்கிற\வருகிற உபத்திரவங்களை குறித்து யோசித்துப்பாருங்கள்? இந்த உபத்திரவம் எனக்கு ஏன்? என்பதற்கான பதில் நம்மை பலப்படுத்தவே என்பதாக இருக்கிறது. நாம் மாத்திரம் அல்ல! இயேசு கிறிஸ்துவை பூரணப்படுத்துவதற்காக தேவன் உபத்திரவங்களை பயன்படுத்தினார்.
இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிற நம்முடைய வாழ்க்கையில் இருக்கிற\வருகிற உபத்திரவங்களை குறித்து யோசித்துப்பாருங்கள்? இந்த உபத்திரவம் எனக்கு ஏன்? என்பதற்கான பதில் நம்மை பலப்படுத்தவே என்பதாக இருக்கிறது. நாம் மாத்திரம் அல்ல! இயேசு கிறிஸ்துவை பூரணப்படுத்துவதற்காக தேவன் உபத்திரவங்களை பயன்படுத்தினார்.
அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. (எபி 2:10)
நம்முடைய வாழ்க்கையின் உபத்திரவங்களை நம்மை அழிப்பதற்காக அல்ல, மாறாக அது நம்மை பலப்படுத்தவே என்பதை நாம் புரிந்துக்கொள்வோம். இந்த உபத்திரவத்தின் காலத்தில் தேவன் நம்முடன் தான் இருக்கிறார் (எபி 13:5,6), என்கிற உண்மையை நாம் புரிந்துக்கொள்வோம். நன்றி.