Honey trap

(நீதி 7:21-23)

📅 July 2026 ✍ TJ Broadcast ⏱ 8 Minutes Read

தேவன் படைத்த அதிசயமான செடிகளில் ஒன்று தான் பிட்சர் பிளான்ட் (Pitcher plant) . இந்த செடி ஒரு மாம்ச விரும்பி, அதாவது இது உயிர்வாழ்வதற்கு சில உயிரனத்தின் மாம்சங்களை சார்ந்து இருக்கிறது. இது பூச்சிகளை உண்டு வாழும் ஒரு ஊனுண்ணித் தாவரம் ஆகும் . இந்த செடியானது, தன்னுடைய இலைகளில் அல்லது குடுவைகளில் ஒரு விதமான தேன் போன்ற ஒரு சுரப்பியை சுரக்கிறது. அந்த இனிப்பின் மணத்தினால் மற்றும் சுவையினால் கவரப்பட்ட எறும்புகள், பூச்சிகள், சில நேரங்களில் சிறிய பறவைகள்கூட தன்னைக் கவனிக்காமல் அந்த செடியின் உள்ளே சென்று மாட்டிக்கொள்கின்றன. வெளியே வர முடியாமல் இறுதியில் தங்களுடைய உயிரையே இழந்து விடுகின்றன.

இதற்கு காரணம் என்ன என நீங்கள் நினைக்கிறீர்கள்? அந்த இனிப்பு சுவையால் வந்த ஒருவிதமான போதை தானே! புதிய ஏற்பாடு கிறிஸ்தவர்களுக்கு அடிக்கடி எச்சரிக்கும் காரியங்கள் ஒன்று தான் “தெளிந்த புத்தியாயிருங்கள்” என்பது. (2 தீமோ 1:7; 1 பேது 1:13; 4:7; 5:8; 1 தெச 5:8).

2 கொரிந்தியர் 2:

“சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே”. 2 கொரி 2:11.

தற்காலி சுகத்தை தரும் வாழ்க்கை முறை நம் ஆத்துமாவை நரகத்திற்கு நேராக கொண்டு செல்கிறது. கள்ள உபதேசத்தின் மீது இருக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கை கிறிஸ்துவை விட்டு பிரிக்கிறது. இந்த வலையில் தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கான பதிலை சங்கீதம் 19:7,8 நமக்கு கொடுக்கிறது. கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தைக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழ்வதே நாம் (ரோமர் 6:15-17), நாம் அந்த ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரே வழி.

பகிரவும்

📱 WhatsApp
← முந்தய கட்டுரை அடுத்த கட்டுரை →