நீங்கள் ஒரு கிறிஸ்தவராய் இருப்பீர்கள் என்றால் நீங்கள் இந்த பிரச்சனையை உங்கள் வாழ்க்கையில் எதிர்க்கொண்டு இருப்பீர்கள். அது தான் பாவம். பாவம் என்பது தேவனுக்கும் நமக்குமான உறவில் நம்மையும் தேவனையும் பிரிக்க கூடியதாக இருக்கிறது. (ஏசாயா 59:1-3). ஒரு உண்மையான கிறிஸ்தவர் தன்னுடைய வாழ்க்கையில் எப்பொழுதும் பாவத்துடன் போராடிக்கொண்டு இருக்கிறார் என்பது உண்மையே! பாவம் என்பது என்ன? என்கிற கேள்வி உங்களுக்கு வரலாம். அதற்கான பதிலை வேதாகமம் நமக்கு கொடுக்கிறது. ( 1யோவான் 5:3,4)., தேவனுடைய வார்த்தையை மீறுவது தான் பாவம். ஆதாம், ஏவாள் எதினால் பாவம் செய்தார்கள்? தேவனுடைய வார்த்தையை மீறி தானே! (ஆதி 3:1-12).
பாவம் செய்யும் போது என்ன செய்வது?
ஒரு கிறிஸ்தவர் பாவம் செய்ய கூடாது. ( 1யோவான் 2:1). ஆனால் அவர் பாவம் செய்வார் என்பது உண்மை. ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய வாழ்க்கையில் பாவமே செய்ய மாட்டார் என வேதம் போதிக்கவில்லை. மாறாக அவர் பாவம் செய்யும் போது அதற்கான தீர்வை வேதம் நமக்கு கூறுகிறது. (1 யோவான் 1:8). ஒரு கிறிஸ்தவர் இந்த சரீரத்தில் இருக்கிற வரை அவர் பாவத்தினால் வாதிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. ( 1 யோவான் 2:15-17). இப்பொழுது மிக முக்கியமான கேள்வி இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன?
அவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருடைய இரத்தத்தினால் நமக்கு உண்டாயிருக்கிறது" .
1. பாவத்திற்காக வருந்தி தேவனிடம் மன்னிப்பு கேளுங்கள் ( 2கொரி 10:7-10)
பாவத்தை நியாயப்படுத்தாமல், அந்த பாவத்தை ஒப்புக்கொண்டு அதற்காக வருந்தி தேவனிடம் மன்னிப்பு கேட்பது. தேவனால் மன்னிக்கப்படுவதற்கான கதவை நமக்கு திறந்துக்கொடுக்கிறது. (சங் 51:4-7; யாக் 5:16). இயேசு கிறிஸ்து ஜெபம் பண்ண கற்றுக்கொடுக்கும் போது அவர் “எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்” என கற்றுக்கொடுத்திருப்பார் (லூக் 11:4). தேவனிடத்தில் மன்னிப்பு கேட்பது பாவத்தை நாம் மேற்க்கொள்வதற்கான ஒரு வழியாக இருக்கிறது.
2. மனந்திரும்பி தேவனுடைய வார்த்தையில் தொடர்ந்து நடப்பது: (1 யோவான் 1:6,7)
தேவனிடம் பாவத்திற்காக மன்னிப்பு கேட்தற்கு பின்பாக நாம் செய்ய வேண்டியது, தொடர்ந்து கிறிஸ்துவின் வசனத்தின் படியாக நடப்பதாகும். (1 யோவான் 1:6,7). கிறிஸ்துவின் வசனங்கள் ஜீவ ஒளியாக இருக்கின்றன. அந்த ஒளியில் ஒரு கிறிஸ்தவர் நடக்கும் போது அவர் செய்த பாவங்கள் கழுவப்பட கூடியதாக இருக்கிறது. எபேசியர் 1:7 – ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்துவுக்குள் இருப்பதால் அவர் பெரும் ஆவிக்குரிய ஆசிர்வாதங்களில் ஒன்று தான் “கிறிஸ்துவின் இரத்ததால் கிடைக்கும் பாவ மன்னிப்பு” . ஒருவர் கிறிஸ்துக்குள் வருவதற்கு அவர் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது அவர் பாவமன்னிப்பை பெறுகிறார் (அப் 2:38). அவர் தொடர்ந்து கிறிஸ்துவின் வசனத்தின் படி நடத்து, கிறிஸ்துவின் மாம்சம் மற்றும் இரத்தத்தை நினைவுக்கூறும் போது அவர் தொடர்ந்து கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவ ப்படுகிறார் ( யோவான் 6:56; யோவான் 15:3-5).
3. உங்களை நீங்களை தேவனுடைய வார்த்தைக்கு ஒப்புக்கொடுங்கள் (ரோமர் 6:16,17)
பாவம் செய்ய வேண்டும் என்கிற நினைவு வரும்போது அல்லது சூழ்நிலை வரும் போது நீங்களே முடிவு செய்ய வேண்டும். என்னால் பாவம் செய்யாமல் இருக்க முடியது என ஒருவர் கூற முடியாது. ஒரு துப்பாக்கியை உங்கள் முன்பாக ஒருவர் வைத்துக்கொண்டு நீங்கள் பாவம் செய்தால் உன்னை கொண்று விடுவேன் என கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உயிர் பயத்தினால் அந்த பாவத்தை செய்யாமல் இருப்பீர்கள் அல்லவா அதைப்போல தான் இதுவும். பாவம் செய்வதற்கான தூண்டுதல் வரும் போது நரகத்தை குறித்து யோசித்து பாருங்கள். உங்கள் எண்ணங்களில் தேவனுடைய வார்த்தைக்கு உங்களை ஒப்புக்கொடுத்து அதன் படி செய்யுங்கள். யோசேப்பை போல (ஆதி 39). இப்படி நாம் செய்வதால் தீமை நன்மையினால் வெல்ல முடியும் (ரோமர் 12:21).
கிறிஸ்தவருக்கு பாவத்திற்கான மன்னிப்பு கிறிஸ்துவுக்குள் இருப்பதாலும், தேவன் இரக்கம் , பொறுமையும் மற்றும் கிருபையும் உடையவராய் இருப்பதாலும் இதை பயன்படுத்தி நாம் பாவம் செய்யலாம் என நினைத்தால் தேவனுடைய தண்டனையை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அதினால் தேவனுக்கு பயந்தவர்களாய் வாழுவோம் (ரோமர் 11:21,22).