நீங்கள் ஒரு கிறிஸ்தவராய் இருப்பீர்கள் என்றால் இந்த வார்த்தையை நீங்கள் ஒருமுறையாவது கேட்டு இருப்பீர்கள். “அந்தி கிறிஸ்துவை” பற்றி அநேக கள்ள உபதேசங்களும், கட்டுகதைகளும் இன்று வரை இருக்க தான் செய்கின்றது. உண்மையில் யார் இந்த அந்திகிறிஸ்து? என்றும் இதன் சத்தியம் என்ன என்பதை குறித்தும் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். இன்று அநேக நபர்கள் நம்புவது போலவே, அந்தி கிறிஸ்து சீக்கிரத்தில் தன்னை இந்த உலகத்திற்கு தன்னை வெளிப்படுத்தி, இந்த உலகமனைத்திற்கும் தலைவனாக இருப்பான்! என்பது உண்மையா? அந்திகிறிஸ்துவை குறித்து நாம் அதிகம் படிக்கும் புத்தகம் தான் யோவான் எழுதின நிருபங்கள். யோவான் எழுதின நிருகங்களில் மட்டும் தான் அந்திகிறிஸ்து என்கிற வார்த்தையை நம்மால் பார்க்க முடிகிறது.? (1 யோவான் 2:18,22; 2 யோவான் 7; 1 யோவான் 4:3)
1. கள்ள உபதேசம்?
அந்தி கிறிஸ்து என்பவன் கிறிஸ்துவின் விரோதமானவன் எனவும், அவன் தற்போது வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதன், அவன் விரைவில் உலகளாவிய சர்வாதிகாரியாக உயர்வான் என சில நாமாக்கரண சபையார் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அந்திகிறிஸ்து என்பவன் கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக தான் அதிகாரத்திற்கு வந்து தன்னை வெளிப்படுத்துவான் எனவும், இது இந்த தலைமுறையிலேயே நிகழும் என்றும் வலியுறுத்துகின்றனர். இப்படிப்பட்ட இந்த கருத்துகளுக்கு வேதாகமத்தில் ஆதாரம் என்பது இல்லை.
"இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து".
2. யார் இந்த அந்திகிறிஸ்து?
இந்த அந்திகிறிஸ்து அதாவது, 'ஆன்டிகிரிஸ்டோஸ்' (antikristos) என்ற சொல் புதிய ஏற்பாட்டில் நான்கு பகுதிகளில் மொத்தம் ஐந்து முறை காணப்படுகிறது—இவை அனைத்தும் யோவானின் நிருபங்களிலேயே (1 யோவான் 2:18, 22; 4:3; 2 யோவான் 7) இடம்பெற்றுள்ளன. 1யோவான் 2:22 -யில் பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்தி கிறிஸ்து என்று நாம் படிக்கிறோம்.
3. அந்தி கிறிஸ்துவை பற்றி புதிய ஏற்பாடு கூறும் சத்தியம்!
முதலாவதாக, புதிய ஏற்பாட்டில் அந்தி கிறிஸ்து என்று ஒரு குறிப்பிட்ட தனிநபர் அடையாளம் காட்டப்படவில்லை. மாறாக, "அநேக கிறிஸ்து" தோன்றியுள்ளனர் என்று யோவான் அறிவிக்கிறார் (1 யோவான் 2:18; 2 யோவான் 7).
இரண்டாவதாக,
இரண்டாவதாக, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றவிருக்கும் ஒரு மர்மமான தீய நபர் தான் அந்திகிறிஸ்து என்று வேதாகமம் எங்கும் குறிப்பிடவில்லை. முதலாம் நூற்றாண்டிலேயே அநேக அந்தி கிறிஸ்து இருந்தனர். "இப்போதும் அநேக அந்திகிறிஸ்துகள் தோன்றியிருக்கிறார்கள்" என்று அப்போஸ்தலன் உறுதிப்படுத்துகிறார் (1 யோவான் 2:18; 4:3)
மூன்றாவதாக,
"அந்தி கிறிஸ்துவை" குறித்த யோவானின் குறிப்புகளைக் கூர்ந்து ஆராயும்போது, இச்சொல் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் பல்வேறு வழிகளில் வெளிப்படக்கூடிய 'அவிசுவாசத்தின் ஆவி'யைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான சொல் என்பது தெரியவருகிறது. உண்மையில் கிறிஸ்துவிற்கு விரோதமாகவும், அவருடைய வார்த்தைக்கும் விரோதமாகவும் செயல்ப்படும் எல்லாரும் அந்திகிறிஸ்துவாக இருக்கிறார்கள் ( 2 யோவான் 7-10). இந்த அந்திகிறஸ்து என்பது அவிசுவாசத்தின் ஒரு பொதுவான மனப்பான்மையைக் குறிக்கிறது; ஒரு குறிப்பிட்ட நபரை அல்ல.