அக்கினி ஞானஸ்நானம் என்பது என்ன?

(மத்தேயு 3:11)

📅 July 2026 ✍ TJ Broadcast ⏱ 8 Minutes Read

மத்தேயு 3:11 -யில், “மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்”. இந்த வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி யோவான் கூறின வார்த்தைகளாய் இருக்கின்றன. ஆனாலும் இன்று அநேக நபர்கள் இந்த வசனப்பகுதியை தவறாக புரிந்துக்கொள்கின்றன. இயேசு பரிசுத்த ஆவியானாலும், அக்கினியானாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்பதால், நாங்கள் அக்கினி ஞானஸ்நானம் பெற்றியிருப்பதாகவும், அக்கினி ஞானஸ்நானம் எடுக்காதவர் இரட்சிக்கப்பட முடியாது என நம்புகின்றனர், இது சரியா? அக்கினி ஞானஸ்நானம் என யோவான் எதை கூறுகிறார்?

1. யோவான் ஏன் இதை கூறுகிறார்?

முதலாவதாக, யோவானின் தொடர்ச்சியான ஊழியத்தைப் பற்றிய மத்தேயுவின் பதிவு மிகவும் சுருக்கமான ஒரு விவரம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் "யூதேய வனாந்தரத்தில்" (3:1, 5) பிரசங்கித்தபோது, பெருந்திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர். யோவானை தேடி சென்ற, இந்தக் கூட்டத்தினர் வெவ்வேறு மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தனர். அவர்களில் சிலர் உண்மையான மனதுடையவர்களாக இருந்தனர்; அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் ஆற்றில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றனர் (வசனம் 6). மற்றவர்களோ, அந்தச் சூழலின் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஈர்க்கப்பட்டவர்களாக இருந்தனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்களில் சதுசேயரும் பரிசேயரும் அடங்குவர்

மத்தேயு 3:11

“மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்”

2. நியாயத்தீர்ப்பு

யோவான் இந்த யூதர்களை "விரியன் பாம்புக் குட்டிகள்" என்று கூறினார்; மேலும் "வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? என" அவர்களுக்கு அறிவுறுத்தினார் (வசனம் 7). வசனம் 10,11,12 -யில் இந்த கோபம், நியாயத்தீர்ப்பு என்பதை நாம் புரிந்துக்கொள்கிறோம். நியாயத்தீர்ப்பில் நடக்கும் முக்கியமான காரியம் நீதிமான்களையும், துன்மார்க்கரையும் பிரிக்கிறதாய் இருக்கிறது. மத்தேயு 25:31-34; 2 தெச 1:7-10). இதை தான் யோவான் மத்தேயு 3:10-12 வசனங்களில் சில உதாரணங்களை பயன்படுத்தி கூறுகிறார்.

3. அக்கினி என்பது தண்டனை காண்பிக்கிறது

இந்த மூன்று வசனப்பகுதியிலும் அக்கினி என்பது, தண்டனையை காண்பிக்கிறதாய் இருக்கிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். வசனம் 10 = நல்ல கனி கொடாதா மரமெல்லாம் அக்கினியில் போடப்படும், இது தண்டனையை காண்பிக்கிறது, இதைப்போலவே, வசனம் 11 -யில் அக்கினி ஞானஸ்நானம் என்பது துன்மார்க்கரின் வரும் தண்டனை காண்பிக்கிறதாய் இருக்கிறது. மேலும் வசனம் 13யை பார்க்கவும்.

4. கவனத்தில் கொள்ள வேண்டியகள்:

இக்காரணிகளைக் கருத்தில் கொண்டு, பின்வருவனவற்றையும் கவனிக்கவும். அவர் பரிசுத்த ஆவியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்ற வாக்குறுதி அப்போஸ்தலர்களைக் குறிப்பதாகும். அப்போஸ்தலர் 1-ம் அதிகாரத்தில் உள்ள இரட்சகரின் வார்த்தைகள் இதை உறுதிப்படுத்துகிறது: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். (வசனம் 5) அப்போஸ்தலர் 1:5-க்கும் மத்தேயு 3:11-க்கும் இடையே தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது. பெந்தெகொஸ்தே நாளில் அப்போஸ்தலர்கள் ஆவியின் வல்லமையை "நிறைந்து வழியும்" அல்லது "மூழ்கடிக்கும்" அளவில் (இதுவே 'பாப்டிஸோ' [baptizo] என்ற சொல்லின் முக்கிய அர்த்தம்) பெற்றுக்கொண்டபோது அந்த வாக்குறுதி நிறைவேறியது (அப்போஸ்தலர் 2:1 மற்றும் அதற்கடுத்த வசனங்கள்). "அக்கினியினால் ஞானஸ்நானம் கொடுப்பார்" என்ற சொற்றொடர் பெந்தெகொஸ்தே நாளைக் குறிக்க முடியாது; ஏனெனில் அன்று "அக்கினி ஞானஸ்நானம்" எதுவும் நிகழவில்லை. அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவர் மீதும் "அக்கினி நாக்குகள்" போன்ற தோற்றமுடையவை மட்டுமே "வந்து அமர்ந்தன". அந்தச் சந்தர்ப்பத்தில் அந்தச் சகோதரர்கள் "அக்கினியால் மூழ்கடிக்கப்படவில்லை" ( வச 38).

பகிரவும்

📱 WhatsApp
← முந்தய கட்டுரை அடுத்த கட்டுரை →