கிறிஸ்துவத்தில் mandela Effect (மண்டேலா விளைவு)

அப்போஸதலர் 13:27

📅 August 2026 ✍ TJ Broadcast ⏱ 8 Minutes Read

Mandela Effect (மண்டேலா விளைவு) என்பது என்ன?

'மண்டேலா விளைவு' (Mandela Effect) என்பது ஒரு உளவியல் (psychological ) நிகழ்வாகும்; உண்மையில் நடக்காத ஒரு நிகழ்வு, விவரம் அல்லது உண்மையை குறித்த ஒரு குறிப்பிட்ட தவறான நினைவை ஒரு பெரிய மக்கள் குழுவினர் உண்மையென நம்பிக்கை கொண்டிருப்பது தான் Mandela Effect (மண்டேலா விளைவு) என கூறுகின்றனர்.

நெல்சன் மண்டேலா என்னும் தென்னாப்பிரிக்கத் தலைவர் 1980 -களில் சிறையிலே இறந்துவிட்டதாக திரளான மக்கள் எண்ணிக்கொண்டிருந்தனர், ஆனால் உண்மையில் நெல்சன் மண்டேலா 1990 – யில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, பின்பு 1994 –யிலிருந்து 1999 வரை தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக இருந்து, பின்னர் 2013-யில் மரணம் அடைந்தார், ஆனால் திரளான மக்கள் நெல்சன் மண்டேலா சிறையிலேயே இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்தனர், இதை தான் Mandela Effect (மண்டேலா விளைவு) என கூறுகின்றனர்.

கிறிஸ்துவத்திலும்
மண்டேலா விளைவு இருக்கிறது என உங்களுக்கு தெரியுமா?

இன்றும் அநேக ஐனங்கள், தங்களை கிறிஸ்தவர்கள் என்று நம்பி, தாங்கள் செய்வது தேவனுக்கு பிரியமானது என தவறாக நினைத்து தேவனுக்கு பிடிக்காத, தேவன் சொல்லாத காரியத்தை செய்து கொண்டு இருக்கின்றனர். (மத்தேயு 15:9; அப்போஸ்தலர் 17:22-30; 2 தெச 2:11,12). தேவன் சொல்லாத காரியத்தை தாங்கள் செய்து அதை நாங்கள் தேவனுக்கு செய்வதால் தேவன் மகிமைப்படுவார் என பொய்யை நம்பிக்கொண்டிருக்கும் அவலநிலை இன்று மக்கள் மத்தியில் இருக்கிறது. (2 தீமோ 4:3,4), ஜனங்கள் மத்தியில் இருக்கும் சில தவறான உபதேசங்கள் பற்றி சிறிய குறிப்புகள் கீழே இருக்கிறது.

அப்போஸ்தலர் 13:27

“எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்”

1. இசை கருவிகளை பயன்படுத்தி தேவனை ஆராதிப்பது (எபிரெயர் 13:15)

இசை கருவிகள் என்பது பழைய ஏற்பாட்டில் தேவனை மகிமைப்படுத்துவதில் ஒரு முக்கியமான பங்காக இருந்தது என்றாலும். புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களோ! அப்போஸ்தலர்களோ, இசை கருவிகளை பயன்படுத்தவில்லை, மற்றும் பயன்படுத்தும் படி கட்டளைகளையும் கொடுக்கவில்லை, ஆனால் இன்று திரளான ஜனங்கள் இசைகருவிகளை பயன்படுத்தி நாங்கள் தேவனை ஆராதிப்பதாக, கூறி ஆதி கிறிஸ்தவர்கள் செய்யாத காரியத்தை செய்து கொண்டு வருகின்றனர்.புதிய ஏற்பாட்டில் இசை என்பது இருதயத்தில் இருந்து வருவதாக இருந்தது (எபேசியர் 5:19).

2. மாதத்தில் ஒருமுறை கர்த்தரின் பந்தி (திருவிருந்து) (அப்போஸ்தலர் 20:7)

இன்று அநேக ஜனங்கள், கர்த்தரின் பந்தியை மாதம் ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை எடுத்தால் போதும் என நம்பிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் புதிய ஏற்பாடு தெளிவாக கூறுகிற செய்தி, ஆதி கிறிஸ்தவர்கள் வாரத்தின் முதல் நாளில் (ஞாயிறு கிழமையில்) பங்கு பெற்றனர் என (அப்போஸ்தல் 20:7). ஆனால் கர்த்தரின் பந்தி மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறை என பல சபைகளில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவறை ஐனங்கள் உண்மை என நினைத்துக்கொண்டிருந்தனர்.

3. எல்லா சபைகளும் ஒன்றுதான் ( பிலி 3:17,18)

இன்று கிறிஸ்துவத்தில் 5000க்கு மேற்ப்பட்ட பிரிவினை சபைகள் இருக்கின்றன. ஆனால் எல்லா சபைகளும் ஒன்றுதான் எனவும், எல்லாரும் கிறிஸ்தவர்கள் தான் எனவும் ஐனங்கள் நம்புகின்றன, ஆனால் உண்மையில் அப்படியில்லை, புதிய ஏற்பாட்டின் சட்டத்தின்படி நடக்காத எந்த சபைகளும் கிறிஸ்துவால் உருவாக்கப்பட்டதல்ல! ( 2யோவான் 9).

இந்த பிரட்சனையில் இருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும்?

பொய்யை வெல்ல வேண்டுமானால், உண்மையினால் மட்டும் தான் முடியும், சத்தியத்தை அறிந்து, அதற்கு கீழ்ப்படியும் போதுதான் பொய்யிலிருந்து விடுதலையாக முடியும் (யோவான் 8:32)

பகிரவும்

📱 WhatsApp
← முந்தய கட்டுரை அடுத்த கட்டுரை →