கிறிஸ்துவின் சபையைப் பற்றி அறிந்துகொள்ள நாம் செல்ல வேண்டிய ஒரே இடம் புதிய ஏற்பாடு மட்டுமே. சபை என்பது தேவனின் நித்திய நோக்கம் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் (எபேசியர் 3:9-11). சபை என்பது மிகவும் முக்கியமானது என்பது வெளிப்படையாக இருக்கிறது எனவே, மனிதர்களின் கருத்துக்களால் அல்லாமல், புதிய ஏற்பாட்டின் மூலம் நாம் கிறிஸ்துவின் சபை என்பது என்ன கற்றுக்கொள்வது அவசியமாகும். .
தேவனின் திட்டத்தின்படி சபை என்றால் என்ன ? என்பதையும், இன்று சபை எப்படி இருக்க வேண்டும் என்பதையும்? புதிய ஏற்பாடு நமக்குக் கற்பிக்கிறது.
1. கிறிஸ்துவின் சபை
கிறிஸ்துவால் கட்டப்பட்டது
முதலாவதாக, சபை கிறிஸ்துவால் கட்டப்பட்டது மற்றும் விலைக்கு வாங்கப்பட்டது (மத்தேயு 16:18; அப்போஸ்தலர் 20:28). தெய்வீக அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பாக சபையைத் தொடங்க யாருக்கும் உரிமை இல்லை (1 கொரிந்தியர் 1:10-13-ஐப் பார்க்கவும்). தேவனின் குமாரனாகிய கிறிஸ்து மட்டுமே இதற்குத் தகுதியானவர்; அவரே தன்னுடைய சபையை நிறுவினார் (எபேசியர் 4:4; 1:22-23-ஐப் பார்க்கவும்). கொரிந்து சபைக்குள் சில பிளவுகள் ஏற்பட்டபோது, பவுல் சில ஆழமான கேள்விகளைக் கேட்டார். "கிறிஸ்து பிரித்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டார்? அல்லது பவுலின் நாமத்தினாலேயா? நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள்?" (1 கொரிந்தியர் 1:13). இந்த வசனத்தின் உண்மைகளின் அடிப்படையில் சபை கிறிஸ்துவுக்குச் சொந்தமானது. அவர் அதற்காக மரித்தார். அவரே அதைக் கட்டினார். நாம் அவருக்குச் சொந்தமாவதற்கான வழிமுறைகளை அவரே வகுத்துள்ளார். சபை கிறிஸ்துவுக்குச் சொந்தமானது. அவரே சபையின் தலைவராவார் (கொலோசெயர் 1:18).
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
3. கிறிஸ்துவின் சபை என்பது
மனிதர்களால் உருவாக்கப்பட்டது இல்லை
'கிறிஸ்துவின் சபை' என்பது மனிதர்களால் நிறுவப்பட்ட ஒரு மத அமைப்பைக் குறிக்கும் பிரிவின் பெயர் அல்ல. மாறாக, இது உலகில் உள்ள தேவனுடைய மக்களைக் குறிக்கும் ஒரு பொதுவான பெயராகும் — அதாவது, சபை குறித்த புதிய ஏற்பாட்டுப் போதனைகளைப் பின்பற்றும் மக்களை இது குறிக்கிறது.
பவுலும் மற்ற அப்போஸ்தலர்களும், பண்டைய உலகம் முழுவதும் நற்செய்தியைப் பிரசங்கித்தபோது, வெவ்வேறு பிரிவு சபைகள் (denominations) உருவாக்கப்படவில்லை. எருசலேமில் முதன்முதலில் பிரசங்கிக்கப்பட்டதைப் போலவே கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு மக்கள் கீழ்ப்படிந்தபோது உருவானதே கிறிஸ்துவின் சபை.
4. கிறிஸ்துவின் சபையில் சேர என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் இரட்சிக்கப்படும் போதுதான் கிறிஸ்துவின் சபையில் உறுப்பினராக மாறுகிறார் (அப்போஸ்தலர் 2:47). இரட்சிப்பு எவ்வாறு கிடைக்கிறது என்பது குறித்து எந்தத் தவறுதலான புரிதலும் இருக்கக்கூடாது. ஒரு நபர் இயேசுவை தேவனுடைய குமாரனாக விசுவாசிக்க வேண்டும் (யோவான் 20:30-31; யோவான் 8:24), பாவத்தைக்குறித்து மனந்திரும்ப வேண்டும் (அப்போஸ்தலர் 17:30), இயேசுவே தேவனுடைய குமாரன் என்று அறிக்கை செய்து, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று விசுவாசிக்க வேண்டும் (ரோமர் 10:9,10), மேலும் பாவமன்னிப்புக்காக ஞானஸ்நானம் பெற வேண்டும் (அப்போஸ்தலர் 2:38; 22:16).
புதிய ஏற்பாட்டில் உள்ள கர்த்தருடைய கட்டளைகளின்படி ஒரு நபர் இரட்சிக்கப்படும்போதும், அதாவது "கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம்" பெறும்போதும் (கலாத்தியர் 3:26-27), அந்தத் தருணத்திலேயே அவர் அவருடைய சபையின் உறுப்பினராகிறார் (எபேசியர் 5:23). "இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்" (அப்போஸ்தலர் 2:47).
கிறிஸ்துவே சபையின் தலைவராக இருப்பதால், நாமாகவே உருவாக்கிய ஆராதனை முறைகளையோ அல்லது தலைமைத்துவம் குறித்த நமது சொந்த விருப்பங்களையோ நாம் நடைமுறைப்படுத்த முடியாது. தனது சபைக் கூட்டங்களில் என்ன நடைபெறுகிறது என்பதை கிறிஸ்து கவனத்தில் கொள்கிறார். வேதத்திற்கு முரணான நடைமுறைகளை அவை தொடர்ந்து பின்பற்றினால், அவர் அவற்றைச் சீர்செய்வார்; அத்துடன் அவற்றை விசுவாசத்திலிருந்து விலகிச் சென்றவையாகவும் (விசுவாசத் துரோகம் செய்தவையாகவும்) கருதுவார் (காண்க: வெளிப்படுத்துதல் 2:5; 2 யோவான் 9).