ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.
நோக்கம்
ஜூன் 28-ஆம் தேதி சென்னையில், LGBTQ-வை ஆதரிக்கும் வாலிபர்களும் அவர்களது பெற்றோர்களும் இணைந்து ஒரு பேரணியை நடத்தினர். இந்தப் பேரணி சென்னையில் முதன்முறையாக நடைபெறுவது அல்ல; இது 18-வது முறையாக நடைபெறும் பேரணி என்பது குறிப்பிடத்தக்கது. இது நமக்கான பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்துகிறது.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் தாக்கம் இளம் வாலிபர்களிடையே மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. “என் வாழ்க்கை, என் உரிமை” போன்ற கருத்துகள் அவர்களின் சிந்தனையிலும் வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.
அதேபோல், LGBTQ குறித்த கருத்துகளும் ஆதரவும் இளம் வாலிபர்கள் மத்தியில் பரவி வருகின்றன. இதனால், LGBTQ என்பது என்ன? இதன் பின்னணி என்ன? இதுபோன்ற கருத்துகளை கிறிஸ்தவர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? மேலும், இதுகுறித்து வேதாகமம் என்ன போதிக்கிறது? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
இந்தக் கட்டுரையில், LGBTQ என்றால் என்ன, அதை எவ்வாறு அணுகி எதிர்கொள்வது, மேலும் இந்த விவகாரம் குறித்து வேதாகமம் கூறும் போதனை என்ன என்பதைப் பற்றி ஆராய்வோம்..
1. LGBTQ என்பது என்ன?
LGBTQ என்பது பல்வேறு பாலியல் நாட்டங்கள் மற்றும் பாலின அடையாளங்களை குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சுருக்கச் சொல்லாகும். இதில் Lesbian, Gay, Bisexual, Transgender மற்றும் Queer/Questioning ஆகிய சொற்கள் அடங்குகின்றன.
LGBTQ இயக்கம் பொதுவாக ஒரே பாலினத்தவர்களுக்கிடையிலான (ஓரினச்சேர்க்கை) உறவுகள் மற்றும் திருமணத்தை அங்கீகரிப்பது, பாலியல் நாட்டம் மற்றும் பாலின அடையாளத்தின் அடிப்படையில் சம உரிமைகளை ஆதரிப்பது போன்ற கருத்துகளுடன் தொடர்புடையதாக உள்ளது.
இன்றைய டிஜிட்டல் மற்றும் சமூகச் சூழலில், LGBTQ குறித்த கருத்துகள் குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே அதிகமாக வெளிப்படுகின்றன. கேலப் (Gallup) நிறுவனத்தின் ஆய்வுத் தரவுகளின்படி, அமெரிக்காவில் ஜென் Z தலைமுறையைச் சேர்ந்தவர்களில் சுமார் 23% பேர் LGBTQ+ எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
இது வெளிப்படையாக தேவன் வெறுக்கிற ஓரினச்சேர்க்கை மற்றும் பாலின பாவங்களை ஆதரிக்கும் கொள்கைகளை ஆதரிக்கின்றது. (ரோமர் 1:24-28). தேவனுடைய திட்டத்திற்கு விரோதமாக வெளிப்படையாக இருப்பதை இது காண்பிக்கிறது.
2. இந்த பிரட்சனைக்கான காரணங்கள்:
-
ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பவர்கள், சிலர் பிறக்கும் போதே
ஒரே பாலினத்தின்மீது பாலியல் ஈர்ப்பு
(Same-Sex Attraction) கொண்டவர்களாகப் பிறக்கிறார்கள் என்று கூறுகின்றனர்.
- ஆனால் National library of medicine நடத்திய ஆய்வில், எல்லா நபர்களின் மூளையில் ஏற்ப்படும் மாற்றமும் வயது வந்த பிறகே நிகழ்கின்றன, என்றும் உண்மையில் யாரும் ஓரினச்சேர்க்கையாளராக பிறப்பதில்லை என்பதையும் கூறுகிறது
- இந்தப் பிரச்சனைக்கான காரணங்களாக, National Library of Medicine-ல் வெளியிடப்பட்டுள்ள சில ஆய்வுகள், சிறுவயதில் ஏற்படும் மறக்க முடியாத கசப்பான அனுபவங்கள், பெற்றோரிடமிருந்து ஏற்படும் மனஅழுத்தம், தன்னைப் பற்றிய போதுமான சுயவிழிப்புணர்வு இல்லாமை போன்ற பல்வேறு காரணிகளை குறிப்பிடுகின்றன.
- ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் அல்லது ஒரே பாலினத்தின்மீது பாலியல் ஈர்ப்பைக் கொண்ட நபர்களிடையே தற்கொலை முயற்சி, மனச்சோர்வு, பதட்டம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்றவை அதிகமாகக் காணப்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- இந்த ஆய்வில், வாலிபர்களின் சிந்தனை, திறமை போன்றவற்றை சிதைக்கும் நோக்கத்தில் அதிகாரத்தில் இருக்கும் நபர்களின் உத்தியாக இருக்கலாம் என கூறுகிறது.
- தேவனுடைய வார்த்தையான பரிசுத்த வேதாகமம் பெருமையும், இச்சையும் தான் இதற்கு காரணம் என கூறுகிறது. (ரோமர் 1:24-28)
3. இப்படிப்பட்டவர்களை கிறிஸ்தவர்களாக
நாம் எவ்வாறு அணுக வேண்டும்?
- இயேசு கிறிஸ்து இந்த இடத்தில் இருந்தால் அவர் எப்படி இந்த ஜனங்களை எதிர்கொண்டிருப்பார்? (யோவான் 8:1-11; லூக் 7:36-50)
- கோபப்படாமல், அவர்களை வெறுக்காமல், அவர்களை சீர்ப்படுத்துவதற்கு முயற்சி செய்திருப்பார். அவர்களின் மீதான அன்பை காண்பித்திருப்பார் (மாற்கு 2:16,17)
- நாம் எல்லாரும் பாவிகள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் (ரோமர் 3:23). கிறிஸ்து நமக்காக மரித்ததுப்போல தான் அவர்களுக்காகவும் மரித்தார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ( தீத்து 2:14). அவர்கள் தேவனிடம் சேருவதற்கு தடையாக நாம் இருக்கலாமா? அவர்களை வெறுப்பதும், அவர்களுடன் பேச வெட்கப்படுவது,, இயேசு இதை செய்வாரா?
- LGBTQ தொடர்பான விவாதங்களில் வெற்றி பெறுவதே நமது குறிக்கோளாக இருக்கக் கூடாது. மாறாக, சத்தியம் , அன்பு, பரிசுத்தம், தாழ்மை மற்றும் இரக்கமாகவும் கிறிஸ்துவை உண்மையாகவும் விசுவாசத்துடனும் பிரதிபலிப்பதே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
- அவர்களுடன் நல்ல பேச்சுதொடர்பை ஏற்ப்படுத்துங்கள், நீங்கள் அதிகமாய் பேசுவதை விட அவர்களை பேசும்போது அவர்களின் அனுபவங்கள், கேள்விகள் மற்றும் போராட்டங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் அவர்களின் சூழ்நிலையை கேட்பது அவர்களை செய்யும் தவறை சம்மதிப்பதைக் குறிக்காது.(எபி 4:15; எபி 5:1,2)
- உங்கள் தனிப்பட்ட கருத்தை “தேவனுடைய சத்தியம்” என்று கூறுவதற்குப் பதிலாக, நீங்கள் நம்பும் வேதாகமப் போதனையை அதன் சூழலுடன் விளக்குங்கள். ( 1 பேதுரு 3:15)
- நம்பிக்கையை கட்டாயப்படுத்த முடியாது. உங்கள் பணி சத்தியத்தை அன்புடன் பகிர்வது; மற்றவரை அவமானப்படுத்துவது அல்லது அழுத்தம் கொடுப்பது அல்ல. (கொலோ 4:6)
- இதற்கு மேலாக உங்கள் நல்ல நடக்கையே அவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும், நல்ல முன்மாதியாக இருங்கள் ( 1பேதுரு 3:16; தீத்து 2:7)