உபத்திரவம் (அ) திடீர் மாற்றங்களின் காலத்தில் நீங்கள் எது உங்களை செயல்ப்படுத்துகிறது? விசுவாசமா? பயமா? பேதுரு , இயேசு கடலின் மீது நடப்பதை பார்த்து தானும் நடக்க வேண்டும் என இயேசுவிடம் கேட்டார். இயேசுவின் கட்டளையின்படி பேதுருவும் ஜலத்தின் மீது நடந்து இயேசுவிடம் போக ஆரம்பித்தார். ஆனால் காற்றும் கடலும் பலமாயிருக்கிறதை கண்டு கடலில் முழ்க ஆரம்பித்து பயந்து இயேசுவே காப்பாற்றும் என அலறியதை மத்தேயு 14:28-30-யில் நாம் படிக்கிறோம். உண்மையில் நாமும் பேதுருவைப்போலவே நம்முடைய கிறிஸ்த ஜீவியத்திலும் இருக்கிறோம். எப்படி பேதுரு உற்சாகத்தில் ஆரம்பத்தில் கிறிஸ்துவை நோக்கி ஜலத்தின் மீது நடந்து கிறிஸ்துவினிடத்தில் செல்ல ஆரம்பித்தாரோ?
அதைப்போலவே நாமும் நம்முடைய உபத்திரவத்தின் நோரத்தில் இந்த உலகத்தை வெற்றிக்கொண்டு பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கிற கிறிஸ்துவை மறந்து ஜயோ! இந்த உபத்திரவத்தில் இருந்து நான் எப்படி மீண்டு வர போகிறேன் என உபத்திரவத்தை பார்த்து உபத்திரவத்தில் முழ்க ஆரம்பிக்கிறோம்.
பிலிப்பியர் 4:13 - என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
இப்பொழுது நீ்ங்கள் உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். உபத்திரவத்தின் மத்தியில் உங்கள் மனகண்களுக்கு முன்பாக நிற்பது என்ன? உபத்திரவமா? அல்லது ஜெயவீரராய் இருக்கிற கிறிஸ்துவா? கிறிஸ்து நம்முடன் இருக்கிறார் என்கிற விசுவாசத்தில் தைரியமாய் நமக்கான ஓட்டத்தில் கிறிஸ்துவை நோக்கி ஓடுவோம். (எபி 12:1-3)