நமக்குள் இருக்கும் அபிஷேகம்

(1 யோவான் 2:27)

📅 July 2026 ✍ TJ Broadcast ⏱ 8 Minutes Read

கிறிஸ்துவின் சபையாருக்கும், நாமக்கரண கூட்டத்தருக்கும் இருக்கிற மிகப்பெரிய வித்தியாசமே சத்தியம் தான். சத்தியம் தான் கிறிஸ்துவின் சபையாராய் இருக்கிற நம்முடைய வாழ்க்கையில், உபதேசத்தில் மிகப்பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.

. கிறிஸ்துவின் சபையாராய் இருக்கிற நாம் நம்முடைய பாரம்பரியத்திற்கு மேலாக, தனிப்பட்ட விருப்பதற்கு மேலாக மற்றும் உணர்ச்சிகளுக்கு மேலாக நாம் சத்தியத்தை கொண்டு, சத்தியத்திற்கு கீழ்படிகிறோம், கீழ்ப்படிய விரும்புகிறோம். அப். யோவான் இந்த சத்தியத்தை, நமக்குள் இருக்கும் அபிஷேகம் என கூறுகிறார்.

1 யோவான் 2:27

1 யோவான் 2:27 -யில் நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.

இந்த சத்தியம் வெறும் உபதேச அறிவாக மாத்திரம் நம்மிடம் இல்லாமல் , அது தினசரியான நம்முடைய வாழ்க்கையில் நம்மை போதித்து வழி நடத்த கூடியதாக இருக்கிறது. அது நம்முடைய வாழ்க்கையில் மாத்திரம் அல்லாமல் மற்றவர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வருகிறது. அது நமக்கு தைரியத்தையும், தெளிவையும், உற்சாகத்தையும், ஆறுதலை தர கூடியதாக இருக்கிறது. இப்பொழுது நாம் நம்மை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. சத்தியம் அறிவாக மாத்திரம் இருக்கிறதா? இது நம்முடைய வாழ்க்கையில், மாற்றவர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறதா?

பகிரவும்

📱 WhatsApp
← முந்தய கட்டுரை அடுத்த கட்டுரை →