உலக புகழ் பெற்ற சார்லஸ் டார்வின் என்னும் ஆங்கிலேய இயற்கையியலாளரின் கூற்று படி மோசமான, கடினமான சூழ்நிலைகளில், அல்லது ஆபத்தான சூழ்நிலையில் அந்த சூழ்நிலைக்கு தகுதியாக தன்னை உருமாற்றிக்கொள்ளும் (அ) அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் உயிரனமே பிழைக்கும் என கூறினார்.
இதை தான் Survival of the fittest (பரிணாம வளர்ச்சிக் கொள்கை) என கூறுகிறார்கள். இது பெரும்பாலும் "தகுதியானவை மட்டுமே உயிர்வாழும்" என்பதாக இருக்கிறது. இந்த கொள்கையானது மனிதர்களின் அன்றாட வாழ்க்கையிலும் கூட நம்மால் பார்க்க முடிகிறது. வேலை செய்கிற இடத்தில், அந்த வேலையில் முன்னேற அல்லது நிலைக்க அங்கு வேலை செய்ய கூடியவர்கள், உயர் அதிகாரத்தில் இருக்கிறவர்களிடம் நடிப்பதும், மற்றவர்களை பற்றி தவறாக பேசுவதும், காக்கா பிடிப்பது போல பேசுவது போன்ற செயல்களை செய்து வருவார்கள். ஆனால் இங்கு ஒரு கேள்வியை நாம் கேட்க வேண்டியது முக்கியம் அது விசுவாசமா? தகுதியா ? என்பதே
எபிரெயர் 10:38 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது
சாத்ராக் , மேஷாக், ஆபேத்நேகோ என்னும் மூன்று தேவனுடைய மனிதர்கள் உயிர் பிழைப்பதற்காக தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் தங்களை மாற்றிக்கொள்ளாமல், ராஜாவுக்கு பிரியமாய் நடக்காமல். விசுவாசத்தினால் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படித்து தேவன் மீது வைத்திருக்கும் விசுவாசத்தினால் பிழைத்தார்கள். இப்பொழுது நாம் நம்மை குறித்து யோசித்து பார்ப்போமா! நான் எதினால் பிழைத்து கொண்டு இருக்கிறேன்? பிழைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பொய்யான, மோசமான வாழ்க்கையை வாழுகிறேனா? போலியான வாழ்க்கையை வாழுகிறேனா? அல்லது தேவன் மீது இருக்கிற விசுவாசத்தினால் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாக கீழ்ப்படிகிறேனா? ஞாபம் வைத்துக்கொள்வோம் விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்.