நாங்கள் சோர்ந்து போகிறதில்லை

2 கொரிந்தியர் 4:1

📅 July 2026 ✍ TJ Broadcast ⏱ 8 Minutes Read

வேதாகமத்திலுள்ள அருமையான புத்தகங்களில் பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதின இரண்டாம் நிருபமும் ஒன்று. தன்னால் சுவிசேஷத்தை கேள்விப்பட்டு, கிறிஸ்துவினிடத்தில் வழி நடத்தப்பட்ட கொரிந்தியர் தனக்கு(பவுலுக்கு) விரோதமாய் பேசும் சூழ்நிலைகளை பவுல் எதிர்கொண்டார். இது எவ்வளவு மோசமானதாக இருத்திருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள்? தான் யார் மீது அதிகமான அன்பு வைத்திருந்தாரோ! அவர்களே தனக்கு விரோதமாய் செயல்ப்படும் சூழ்நிலைகள் மிகவும் மோசமானது அல்லவா? ( 2 கொரி 12:15). இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பவுலால் இந்த வார்த்தைகளை கூற முடிந்தது?

நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; ( 2 கொரி 4:8). பவுலால் இது எப்படி முடிந்தது? மோசமான, கடினமான சூழ்நிலைகளில் பவுலால் இதை எப்படி கூற முடிந்தது? பவுல் தேவனுடைய இரக்கத்தை சார்ந்திருந்தார். தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு, தேவனுடைய இரக்கம் நமக்கு கிடைத்திருக்கும் ஆசீர்வாதங்களில் மிகவும் பெரிய ஒன்று.(புல 3:22; எபே 1:7), தேவனுடைய இரக்கம், நம்மீது தேவன் பொறுமையாய் இருப்பதற்கு காரணமாகிறது. 1 தீமோ 1:16. தேவனின் இரக்கம், பொறுமை நாம் குணமாவதற்கு நம்மை ஏவுகிறது (ரோமர் 2:4).

2 கொரிந்தியர் 4:1

இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை. 2 கொரி 4:1.

தேவனுடைய இரக்கத்தினால் பவுல் உள்ளான மனிதனில் நாளுக்கு நாள் புதிதாக மாறினார் (2 கொரி 4:16). இப்பொழுது நாம் சோர்ந்து போவதற்கான காரணம் என்ன என்பதை யோசித்து பார்ப்போம். தேவனுடைய வார்த்தையினால் நாம் நம்மை புதிதாக்குகிறோமா? இல்லையென்றால் பழைய மனிதனையே சுமந்துக்கொண்டு பழையவைகளை நினைத்து சோர்ந்துப்போகிறோமா?

பகிரவும்

📱 WhatsApp
← முந்தய கட்டுரை அடுத்த கட்டுரை →