வளர்ச்சியா அல்லது வளர்ச்சி போன்ற தோற்றமா?

1 கொரிந்தியர் 4:1

📅 July 2026 ✍ TJ Broadcast ⏱ 8 Minutes Read

நாம் கிறிஸ்துவுக்குள் வளர வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. (கொலோ 1:9-11, எபே 4:11-15). ஆனால் எது உண்மையான வளர்ச்சி என்பதை குறித்து நாம் யோசித்து பார்க்க வேண்டும்? பொதுவாகவே குழந்தை பருவத்தில் இருந்து வாலிப பருவத்தை அடையும் பிள்ளைகள், வளர்ந்த நபர்களை போல தங்களை காண்பித்துக்கொள்வார்கள்.

தங்கள் பேச்சுகளில், செயல்களில் இதை செய்வதை நம்மால் பார்க்க முடியும். இதனால் வீட்டில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் கூட சண்டைகள் வரதான் செய்யும். இதற்கு காரணம்? குழந்தை பருவத்தில் இருந்து வாலிப பருவத்தை நோக்கி வளரும் பிள்ளைகள். தங்களுக்கான அடையாளத்தை தேடுவது தான். கிறிஸ்துவுக்குள் வளருவது என்பது என்ன? கிறிஸ்துவுக்குள் வளருவது என்பது அது மற்றவர்களிடம் இருந்து கவனத்தை ஈர்த்துக்கொள்வதா? இங்கு இப்படி ஒருவன் இருக்கிறேன் என்னை பாருங்கள் என்று கூறுவதா? கிறிஸ்துவுக்குள் வளருவது என்பது அது தேவனுடைய சித்தத்தை அறிந்து, அந்த சித்தத்தை தன்னுடைய வாழ்க்கையில் நிறைவேற்றுவது.

எபிரெயர் 5: 13,14.

பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும். எபி 5: 13,14.

வளர்ச்சி அடைத்தவனைப்போல தோற்றத்தை காண்பிக்க தேவன் விரும்பவில்லை, மாறாக நாம் உண்மையில் வளர்ந்தவர்களாய் இருக்க வேண்டும் என தேவன் எதிர்பார்க்கிறார். நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையை சரியான இடத்தில் பயன்படுத்தி வாழ்வதும், அதை மற்றவர்களுக்கு சொல்வதும் தான் உண்மையான வளர்ச்சி.

பகிரவும்

📱 WhatsApp
← முந்தய கட்டுரை அடுத்த கட்டுரை →